ஆடை அலங்காரம்
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணென்னும் புதிரை
புரியாமல் புலம்பும்
ஆணினத்தின் அடையாளம் நான்
வண்ணமாய் உடையுடுத்தி
அன்னமாய் நடை போட்டு
அலங்கார தேராய்
பொன் நகை பூட்டி
புன்னகை மீட்டி
வீதியுலா வரும் பெண்ணை
கண்ணெடுத்து பார்த்தால்
காமுகன் என்கிறாள்
பார்க்கமல் தவிர்த்தால்
தெண்டம் என்கிறாள்
பிறர் பார்க்கவே
பெரிதாய் அலங்கரிக்கும் பெண்ணே
பார்த்தல் தவறா?
பார்வை தவறா?்
பின் தொடர்ந்தால் பேடி என்கிறாய்
முன் நின்றால் பொறுக்கி என்கிறாய்
விலகி நின்றால் கண்ணீர் வடிக்கிறாய்
விடை கேட்டால் விம்மி துடிக்கிறாய்
என் மீது நீ உரிமை கொண்டால்
பாசம் என்கிறாய்
உன் மீது நான் உரிமை கொண்டால்
வேஷம் என்கிறாய
நீ பேசும் கோபவார்த்தை
விளையாட்டென்கிறாய்
நான் பேசும் கோப வார்த்தை
அமிலம் என்கிறாய
நீவைக்கும் செலவு
உரிமை என்கிறாய்
நான் செய்யும் செலவு
கடமை என்கிறாய்
நான் என் செய்வேன்
பெண்ணென்னும் மாயப் பேயை
அடிக்கவா? அணைக்கவா?