பெண்கள்
அன்று
கள்ளிப்பால் கசப்பில் இருந்து தப்பித்து,
கணவனுக்கு சேவை செய்ய மட்டுமே பிறந்து,
காலமெல்லாம் வீட்டினுள் முடங்கி கிடந்து,
கல்லறை அடைந்தார்கள் பெண்கள்.
இன்று
கல்வியால் காலத்தை உணர்ந்து,
கடும் உழைப்பால் உலகளவில் வளர்ந்து,
காணும் துறைகளெல்லாம் பெரும் சாதனைகள் புரிந்து,
காலச் சரித்திரத்தை மாற்றிய பெண்கள் மேலும் மேலும் சரித்திரம் படைக்க எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.

