இவள் தான் பெண்ணோ

இவள் தான் பெண்ணோ....

கரு தரிப்பில் பெண்ணாய்
உரு தரித்து
கால் தடுக்கி நடக்கும் போது
பூமியும் சுகமாய்
சுவசிக்கிறதே...

பருவம் வளர்ந்து
பக்குவமாய்
நடக்கும் போது
அவள் அடக்கத்துக்கு
எத்தனை பூ
தலைகுனிந்து இருக்கும்...

தாயாய் இன்னொரு
கருவே சுமக்கும் போது
உன் கயவுக்கு
வானம் கூட
எட்டுவது இல்லை..

குடும்பம் என்ற
உலகத்தை உன்
உணர்ச்சிக்குள் வைத்து
சந்தோசம் என்ற வறுமையின்றி
ஆட்சி செய்யும் போது
கடவுளும் கூட உன்
கண்ணுக்குள் தான் .......

எழுதியவர் : reshni (8-Mar-14, 12:20 pm)
Tanglish : ival thaan penno
பார்வை : 106

மேலே