பெண்ணே விழித்தெழு

பெண்ணே விழித்தெழு...
=======================
வெள்ளையனை அன்று எதிர்த்து விரட்டியே
வெற்றிக் கொடியினை நாட்டில் ஏற்றியே
வேலுநாச்சியார் வாழ்ந்த நாடிது - பெண்ணே
வீரம் கொண்டுமே நீயும் வாழ்ந்திடு!!!!

இன்றந்த வீரமே போனதெங்கென்று
எந்தன் நெஞ்சிலே கேள்வி..கேள்வியே..
அஞ்சி வாழ்ந்திடும் பெண்ணே கேளடி
அஞ்சி வாழுதல் ஆகாதாகாதடி!!!

புலியை முறத்தினால் அடித்து விரட்டியே
பெண்கள் வீரத்தில் வாழ்ந்தார் அறிந்திடு
கோழை நெஞ்சத்தை கொன்று போடடி
கொடியோர் எவரையும் எதிர்த்து வெல்லடி!!!

பரங்கிப் படையுடன் எதிர்த்துப் போரிட்டு
இளமை வயதிலே வீர மரணம் தொட்டு
வாள் வீச்சிலே சிறந்த மங்கையாம்
வாழ்ந்த ஜான்சியின் வீரம் பெரிதடி!!!

உறக்கம் என்பது விழிகள் காணட்டும்
உள்ளம் என்றுமே விழித்தே இருக்கட்டும்
வஞ்சகராயிரம் வந்த போதிலும்
நெஞ்சுரத்திலே பாடம் புகட்டடி!!!

அடுப்படியிலே அடைந்து கிடந்திட்டால்
அடிமையாகிடும் நிலையை உணரடி
வீரம் கற்றிட நீயும் மறந்திட்டால்
வாழ்க்கை முழுவதும் சூழும் கேடடி!!!

உந்தன் வீரமும் உந்தன் செயல்களும்
உன்னைக் காக்குமே நாளை உணரடி
உறங்கிக் கிடந்தது போதும் விழியடி - பெண்ணே
இந்த உலகமே இனி உந்தன் வசமடி!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மகளிர் தின வாழ்த்துக்களுடன்,
சொ. சாந்தி.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இலக்கியச் சோலை பத்திரிக்கை நடத்திய கவி அரங்கில் வாசிக்கப்பட்டு இரண்டாம் பரிசினை பெற்ற கவிதை

எழுதியவர் : சொ. சாந்தி (8-Mar-14, 12:25 pm)
Tanglish : penne vizhithelu
பார்வை : 779

மேலே