எதையாவது செய்
அவன் : ச்சே...வாழ்க்கையே வெறுத்து போச்சுடா மச்சி...
இவன் : ஏண்டா ரொம்பத்தான் அலுத்துக்கறே...?
அவன் : அதில்லடா...ஒரு பய நம்மள மதிக்க மாட்டேங்குறான் மச்சி....நண்டு வாண்டு எல்லாமே நம்மள இளக்காரமா பாக்குதுடா..
இவன் : அதுக்கு இப்போ என்ன செய்யனுங்கற..?
அவன் : மச்சி...இந்த உலகமே திரும்பி பாக்குறா மாதிரி நாம ஏதாவது செய்யணும்டா...
இவன் : என்னடா சொல்றே?
அவன் : ஆமாண்டா...நம்ம திறமைய காட்டனும்டா...
(சிறிது யோசனைக்கு பின்.....)
இவன் : ஐடியா.... நான் சொல்றா மாதிரி செய் மாப்பிள...
அவன் : என்னடா..?
இவன் : மாப்ள...ஒரு யானைக்கு மேல ஏறி தலைகீழா நின்னுக்கோ... அப்படியே போட்டோ எடுத்துக்கோ..அப்புறம் அந்த போட்டோவ தலைகீழா வச்சு போஸ்டர் அடிச்சு ஒட்டு மாப்ள...அப்புறம் பாரு இந்த உலகம் எப்படி உன்னய திரும்பி பாக்குதுன்னு...