யார் என்று தெரிகிறதா
புலி கொண்ட நகங்கள்
இவன் கொண்ட விரல்கள்...
புயல் வர, வேண்டும்
இவன் விரல்- வரிகள்.....
கரை தாண்டும் அலைகள்
இவன் கோபக் கணைகள்....
களை வார, வேண்டும்
இவன் விழி- புலிகள்....
தீக்குச்சி தலையில்
இவன் கோபம் இருக்கும்,
போர்க்களம் புகுந்தால்
தீ மழை பறக்கும்....
கூர்கத்தி முனையில்
சக்திகள் இல்லை,
செலுத்திடும் கையே
வெற்றியின் பிள்ளை....
ஆயுதம் எடுத்திட
நீயே விதைத்தவன்,
விதைகளின் வேர்களில்
விழித்தவன் வேதங்கள்....
எதிர்க்கத் துணித்தவன்
எரிமலை விற்கிறான்,
வியர்க்கத் துவங்குமே
விண்மீன் துகளுக்கும்....
போர் வரும் நாளை
நேர் நின்று பார்ப்பவன்,
யார் பெரும் கோழை
வாள் தின்று பார்க்குமே...
யாரிவன்- ஆழ்கடல்
தீ சுடினும் - வான் திடல்
ரத்தம் கொதிக்கட்டும்,
எதிரியின் சத்தம் அடங்கினும்
யுத்தம் தொடரட்டும் -அது
கத்தும் திசை எட்டும்....
தத்தத் தரிகிட
சாபங்கள் உடையட்டும்,
நித்தம் புது வரி
பக்கங்கள் நிரம்பட்டும்....
தத்தத் தரிகிட
சாபங்கள் உடையட்டும்,
நித்தம் புது வரி
பக்கங்கள் நிரம்பட்டும்....
பாரதி மீசை
எழுத்தை விதைக்கட்டும்....
சேவின் தீர்க்கம்
வாக்கியம் அமைக்கட்டும்...
பகத்தின் ஆக்கம்
பக்கங்கள் ஆகட்டும்....
சுபாசின் சுவாசம்
புத்தகமாகட்டும்....