இறுதி கோரிக்கை

மேடையொன்று கொடுத்து
கவி பாடலை எழுதவைத்து
கூவி அழைத்து பார்வைகள்
குவிய வைத்தது ..........!
ஓர் இலக்கிய களம்.


பயின்றேன்...!
எழுதினேன்...!
நன்றாகவே
வளர்ந்துக்கொண்டிருக்கிறேன்.

முகஸ்துதிக்கு பாராட்டுக்கள்
லஞ்சமாக சில பாராட்டுக்கள்
உண்மையாகவும் சில பாராட்டுக்கள்.
விஷமத்தனத்தில் சில விமர்சனங்கள்
ஏணியில் ஏறவைத்தது சில விமர்சனங்கள்.
அச்சாணி முறிந்தவிட்டதென்று
அச்சம் ஏற்றியது சில குற்றச்சாட்டுக்கள்.

இவைகளில், இவர்களின்
எந்த கள்ளும் போதை
ஏற்றிடவில்லை...!
எந்த முள்ளும் வதம்
செய்திடவில்லை...!
என்னுள் , என் பக்குவத்தின்
தலைக்குள் மூளைவீங்கி
தலைக்கணமாக ஆடிடவில்லை...!

பொறுமை எதுவரை...?
பொறாமையை புறந்தள்ளும்வரை
அன்றி
பொல்லாதவர்களை அல்ல..

ஆவேசம், ஆத்திரம்
அது வரம்.. எனக்கு வரும்...!
உணர்வு.. தன்மான உணர்வு..!
எனை கெஞ்சிட வைக்காது

கருத்தின் கழுத்தை
நெறித்தாலும் என்
தன்மான கைகள்
அடமானமாக எவரின்
கால்களையும் பிடிக்காது..!

எவரின் ஆதரவுமின்றி
எந்த துணையுமின்றி
எதையும் எட்டிப்பிடிக்கும்
தன்னம்பிக்கையுடைய
ஊனமுற்ற கவிஞன் நான்..!

இவனுக்கு என்னாயிற்று?
இப்போது இப்படி ஏன்
புலம்பி திரிகிறான் என்று
புரியாமல் தவிக்காதீர்கள்...!

உங்களில் சிலருக்கு
கவிதையும் கதையும்
எழுதுவது என்பது
பொழுதுப்போக்கு..!
அல்லது
உணர்வுக்கு மருந்து.,

எனக்கோ...!
பெரும் அவமானங்களை
சந்தித்து, வாழ்வை வெறுத்து
இலட்சிய வெறிப்பிடித்து
ஓரே ஒரு சரித்திர
வெற்றியை வேட்டையாட
துடித்துக்கொண்டிருக்கும்
சராசரிக்கும் மேலான
காட்டுமிராண்டி எழுத்தாளன்.

“பைத்தியம்” என்றுகூட
எனை அழைத்துக்கொள்ளுங்கள்.
வருத்தப்பட எனக்கு நேரமில்லை

என் இலக்கை நோக்கி
உத்வேக சிந்தனையில்
கல்லறையில் தூங்கும்
பாரதியை தட்டியெழுப்பி
அவனின் மூளைக்கு
என்னுயிரை கொடுத்து
அக்னியாய் அலைகிறேன்..!

எனை சீண்டும் தோழமைகளே...!
உங்களில் யாருக்கும்
நான் போட்டியாளன் அல்ல...!

தனிமையாக
கற்பனைகாட்டில்
பறவையாக பறக்கின்றேன்..!

துரோக அம்பு எய்து
என் சிறகுகளை பிடுங்காதீர்கள்..!


என் நேரத்தையும்
என் சிந்தனை திறனையும்
உங்களுக்கு செலவழிக்க வைக்காதீர்..!


Please Leave Me Alone

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (9-Mar-14, 2:56 am)
பார்வை : 507

மேலே