கன்னியானவன்

விசும்பின் துளியொன்று
பட்டுதெறிதிட்ட
எறும்புக் கூட்டமாய்....
என் மனதில்
கூடிகிடந்திட்ட எழுத்துக்கருவுலங்கள்
உன் நினைவுத்துளியொன்று
விழுந்தவுடன்
வேகமாய் கலைந்து
கவிதைகளாய் அரங்கேறுகின்றன
காகிதத்தில்!!!

நீ கிள்ளிவிட்டுச்சென்ற
என் இதயத்தில்
உன் நினைவென்னும் கைவிரல் சுவடுகள்
பதிந்திருப்பதை
நீ அறிந்திருப்பாயோ இல்லையோ என
பத்திரமாய் பதிவு செய்கிறேன்
நான்!!!

திருவாசகத்திலும் உருகாத
என் மனது- உன்
ஒரு வாசகத்தில் மட்டும்
உருகிவிட்டதோடன்று - இன்று
உருக்கிவிட்டும் இருக்கிறேன்
என்னையே - இங்கு
கவிதைகளாய்!!!

உன்
நினைவுத்தென்றலால் வருடப்பட்டஎன் மனது- இன்று
உன் பிரிவுச்சுனாமியால்- அங்கு
சிதிலமடைந்திருக்கும் - என்
இதயக்கோட்டையை- நீ
மீண்டுமொருமுறை
பார்க்கவரவில்லைஎனினும் பரவாயில்லை
பாதிக்காமலாவது இரு...
பாவம் - என்
கவிதைப்பயணிகளாவது அங்கு
இளைப்பாறிக்கொள்ளட்டும்!!!

உணவுக்கு திண்டாடும்
ஏழைகளைப் போல- நான்
உணர்வுகளுக்கு திண்டாடுகிறேன்...
உணவு உயிரை வளர்கிறது!
ஆனால்
உன் உணர்வே
என் உயிரை இயக்குகின்றது!!!

உன்னைத்திட்டுவதற்கு - நான்
திருவுளம் கொள்கிறேன்- ஆனால்
தமிழ் மென்மை என்பதாலேயே
உனைத்திட்டும் வார்த்தை வன்மைகளை
அதற்கு புகட்ட வேண்டியிருகிறது!!!

நானும் தமிழும் ஒன்றுதான்!!!
இருவருமே
கன்னியாக!!!

அனால்
எனக்கோர் சந்தேகம் - தமிழ்
யாரைக் காதலித்தாள்? அவளும்
காலமெலாம் வாழ்ந்துகொண்டிருகிறாள்
கன்னியாகவே
என்னை போல!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தரராஜன் நாகராஜ் (9-Mar-14, 12:15 pm)
பார்வை : 75

மேலே