கனவே கலையாதே பாகம் -1
**************முன்னுரை ************
அன்பு தோழா !தோழி
என்னுடைய இளமை பருவ படைப்பு ஒன்றை இங்கு தொடராய் கனவே கலையாதே என்ற தலைப்பில் தர உள்ளேன் .இதை படிக்கும் அனைவருக்கும் சுவையாய் அல்லது அவரவர் கடந்த காலங்களை நினைவு படுத்தினால் அது தான் இந்த கதைக்கு வெற்றியாக அமையும் என நினைக்கிறேன் ....
மேலும் கதையை கவி வடிவிலும் செவி வடிவிலும் தங்களுக்கு தர உள்ளேன்
இதை படிக்கும் அணைத்து நண்பர்களும் இந்த கதை பற்றிய உங்கள் மேலான கருத்துகளையும் படைப்பின் மதிப்புகளையும் தந்து என்னை மென்மேலும் உற்சாக படுத்திட வேண்டுகிறேன்
இந்த கதை முன்னோட்டம் ...சுருக்கமாக
போக்குவரத்து வசதி இல்லாத தகவல் வசதிக்கு தபால் காரருக்காக காத்துகிடக்கும் ஒரு ஆலமர பஞ்சாயத்தில் ஏழை மாணவனுக்கும் பிறக்கும் ஆசைகளை அவன் கடந்து வந்த பாதைகளும் அவனுக்கும் காதல் வந்து படுத்திய பாட்டையும் அதை எடுத்து சொல்லும் விதங்களும் படிபறிவில்லா கிராமத்தில் அந்த காதல் படும் பாட்டையும் அதிலிருந்து மீண்டானா அவன் காதலின் ஆழமும் கடைசியில் வென்றதா?
என்பதுமே கிளைமாக்ஸ் காதல் கலந்த கிராமிய கதை இப்போது போல் இன்டர்நெட் வசதிகளும் கைபேசி இல்லாத காலங்களில் காதல் மதிக்க பட்ட விதமும் காதல் சொல்ல தவித்த விதமும் இருவரின் உணர்வுகள் அடுத்தவர்க்கு தெரியாமல் இருவருக்கு மட்டுமே பாதுகாத்த விதமும் .....படியுங்கள் உங்களுக்கு விருந்தாய் அமையும் என்பது என் எண்ணம் ....நாளை இனிதே ஆரம்பம் ...
அன்புடன்
கனகரத்தினம்