தாலாட்டு

நீ கண்ணுறங்கும் வேளையில் உன் உறக்கத்தின்
அழகை காண நிலவும் வீட்டை சுற்றும்
தென்றல் மெதுவாய் உன்னை தொட்டுச்செல்லும்
உன் அசைவுக்கேற்ப தங்கத்தொட்டில் தாளமிடும்
ஈரகாற்றுடன் கலந்த மண்வாசம் உன் முச்சுகாற்றுடன் புக துடிக்கும்
உன்னை அள்ளி அணைத்து தேவதைகளும்
ஆடிபாடுவர் அந்த இனிய பாடல்
உன் செவிபுகுந்து இனிய கனவு ஒன்றை தோற்றுவிக்கும்


அக்கனவில் மலைகள் வானைதொட்டிட
பச்சை இலைகளை கொண்ட அடர் மரங்களும்
அதைச்சுற்றிவுள்ள சிறுசெடிகளும் மணம்வீசும் வண்ணமலர்களை தோற்றுவிக்க
வனத்தை வலம்வரும் மலர்வாசத்தை சுவாசித்த
மயில்களும் குயில்களும் தோகைவிரித்து ஆடிபாட அதைக்கண்டு மேகம் குளிர்ந்து மழை போழ்ந்திட,இடி மத்தளம் இசைக்க,மின்னல் வெட்டுகள் வானில் ஒழி வீச
இத்தகைய காட்சியை கண்டு
நீ உறக்கத்தில் சிரிப்பாய்
அதைக்கண்டு நானும் சிரிப்பேன்

ஆதலால்

கண்ணுறங்கு மகனே நீ கண்ணுறங்கு
இருள் பூத்த இவ்விரவில் நியும் கொஞ்சம்
கண்ணுறங்கு
கண்ணுறங்கு மகனே நீ கண்ணுறங்கு
அதிகாலை விடியல்வரை கண்ணுறங்கு
கண்ணுறங்கு....

எழுதியவர் : அனுரஞ்சனி (9-Mar-14, 1:55 pm)
Tanglish : thaalaattu
பார்வை : 129

மேலே