கணவனை பறிகொடுத்து தவிக்கும் கைம்பெண் ஒப்பாரி
தெம்மாங்கு பாட்டுகாரன்
தெருவிலதான் போராண்டி!
மாமனவன் பாட்டுபாடி
மனச தொட்டுட்டு போராண்டி!
வெளிநாடு போனவனும்
உசிரோட வரலையே...!
என் உசிர எடுப்பானோ
பாட்டு சத்தம் கேக்காம நானும்
இனி தூங்குவேனோ
முளைப்பாரி போட்டமச்சான்
எனை ஒப்பாரி வைக்க வச்சான் ...
களனி காட்டுக்குள்ள
காலவச்சா சேராகுமுனு
கப்பலேறி போவானேன்
கட்டையில போறவரை என் ஏக்கம் தீராதே !
கால்கஞ்சு குடிச்சாலும்
என்னாசைமச்சான்
என்னோட இருந்திருப்பான்
பணத்தாசை பட்டு போய் நீயும்
பாடைகட்டி வந்துட்டியே !
பிஞ்சு ஒன்னு தந்திருந்தா
உன்முகத்தை நான் பார்த்து மனமாறிடுவேன்
நஞ்சு கொடி காணாம
நெஞ்சமெல்லாம் வெடிக்குதையா!