+நிலா நிலா ஓடி வா+
விளையாடும் அது வானில்
கவிபாடும் நாம் காணில்
சிரித்திருக்கும் கண் முன்னில்
வெளுத்திருக்கும் நீல்வானில்
ஒத்திருக்கும் நெற்றிப் பொட்டை
நினைவுருத்தும் கவிஞர் பாட்டை
நடத்துமது இரவு வேட்டை
உடுத்துமது சூரிய கோட்டை
நமக்குத்தரும் வெண்மை ஒளி
நடத்திச்செல்லும் உண்மை வழி
இரவில் உலவுமிது கவிஞர்
மனதை தழுவும் வெண்ணிலவு!