மன்னித்துவிடு

என்
விடியலை உனக்காக ஈடு வைக்கிறேன்
உறங்கினால்தானே விடியல் எனக்கு!
என்
பாசங்களை உனக்காக ஈடு வைக்கிறேன்
நீரில்லா நிலையில் ஏது ஈரம் எனக்கு !
என்
உறவுகளை உனக்காக ஈடு வைக்கிறேன்
உணர்வே இல்லாத எனக்கு எதற்கு உறவு!
என்
வாழ்க்கையை உனக்காக ஈடு வைக்கிறேன்
உன்னுடன் வாழ்ந்தால்தானே வாழ்க்கை எனக்கு!
என்
மரணத்தை உனக்காக ஈடு வைக்கிறேன்
உசிரே இல்லாத எனக்கேது புதிதாய் மரணம்!
என்
உலகையே உனக்காக ஈடு வைக்கிறேன்
என்னால் உன்னை ஈடு வைக்க முடியலடி?
மன்னித்துவிடு என்னை !!!நீதானே எந்தன் உலகம்!!!

எழுதியவர் : TP Thanesh (9-Mar-14, 6:09 pm)
Tanglish : mannithuvidu
பார்வை : 218

மேலே