படைப்பாளிகளின் கவனத்திற்கு
கலாமன்றம் அறிவித்த எழுத்துரு பேட்டி கீழ்வரும் கீழ்வரும் கேள்விகளை முதற்கட்டமாக அறிவிக்கிறது !
இதுபோன்ற கேள்விகள் பொது மேடையில் பேசப்படுவதால் எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது என்றே எண்ணுகிறோம். இருப்பினும் ஒவ்வொரு படைப்பாளியிடமும் தனிக்கவனம் செலுத்த கூடிய வகையில் இருக்கும் என்பதற்காகவே பேட்டி வடிவில் சில படைப்பாளிகளை(விருப்பமுள்ளவர்கள்) மையமாக வைத்து இந்த விடயத்தை செய்யலாம் என்று நினைத்தோம் !
இந்தக் கேள்விகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் பதில் எழுதுங்கள்...உங்களின் பதில்கள் பெறுமதியான பதில்களாக இருக்க வேண்டும். கேள்வியை நன்கு உள்வாங்கி பதில் தாருங்கள் !
இரண்டு நாட்களுக்குப் பின்னர், இந்த கேள்விகளுக்கு வரும் பதில்களை மையமாக வைத்து இரண்டாம் கட்ட கேள்விகள் ஐந்து வெளியிடப்படும் !
----------------------------------------கலாமன்றம்----------------
கேள்வி - 01
நீங்கள் விரும்பி எழுதும், எழுத விரும்பும் இலக்கிய வடிவம் எது ? அதற்கான அடிப்படைக் காரணம் என்ன ?
================
கேள்வி - 02
ஒரு கவிதையின் அல்லது படைப்பின் சமூக சேவை எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்று நினைகிறீர்கள் ?
================
கேள்வி - 03
இன்றைய இலக்கிய நகர்வுகள் எதை நோக்கி பயணிக்கிறது? ஆரோக்கியமாக இருக்கிறதா ?
================
கேள்வி - 04
இன்னும் பத்து ஆண்டுகள் முன்நோக்கி பார்த்தால், தமிழ் கலை/இலக்கிய செல்வாக்கு மக்களிடையே எப்படி இருக்கும் ?
================
கேள்வி - 05
நடைமுறை தமிழ் இலக்கியங்கள் பிறநாட்டு/மொழி இலக்கியங்களோடு ஒப்பிடும் போது எந்த நிலையில் இருக்கிறது என்று நினைகிறீர்கள்?
இந்த நிலைக்கு யார் காரணம் என்ன ?
================