அவள் ஒரு நந்தவனம்

சிந்தனையில் --அவள்
நந்த வனம்
சிரிப்பதில் ---அவள்
முல்லை வனம்
கன்னத்தில் --அவள்
மாவினம்
கண்களில் ---அவள்
பூ வினம்
அஞ்சுவதில் ---அவள்
மானினம்
அஞ்சாமையில் ---அவள்
காவல் துறை இனம்
கொஞ்சும் தமிழில் ---அவள்
புதுக் கவிதை இனம்
கவிதை என்றால் ---அவள்
இன்னும் தா தா என்று
கேட்கும் இனம்
காதல் என்றால் ---அவள்
ஒரு நீண்ட மௌனம்
பெண்களில் ---அவள்
ஒரு புதுமை இனம் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Mar-14, 5:38 pm)
பார்வை : 286

மேலே