+உன் வாசம் என் வசம் என் சுவாசம் உன் வசம்+

ஆயிரக்கணக்கான
மலர் மணக்கும்
தோட்டத்தில் கூட
உன் வாசம்
எனை இழுக்குதடி!


நீ மலர் மலர மலர்ந்தவளோ!-இல்லை
மலராக மலர்ந்தவளோ!

நீ மலர் மணக்க மலர்ந்தவளோ!!-இல்லை
மணமாக மலர்ந்தவளோ!!

நீ மலர் மயக்க மலர்ந்தவளோ!!!-இல்லை
எனை மயக்க மலர்ந்தவளோ!!!

குறிப்பு: மீள்பதிவு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Mar-14, 5:10 pm)
பார்வை : 110

மேலே