இலங்கை போராளியின் அன்புள்ள கடிதம்
அப்பா
இப்போதெல்லாம்
நீ என்னை
திட்டுவதில்லை?
நீ மௌனமாக
இருப்பதற்கு
என்ன காரணம்..!
உன்னிடம்
சொல்லாமல் சென்றேன்
உறவுகள்
உணர்வுகள்
பறிக்கப்படுவதால்...
உன்னிடம்
கேளாமல் சென்றேன்
உயிர்கள்
உரிமைகள்
சூரையாடப்பட்டதால்...
என் கண்களுக்கு
முன்னே என் தங்கை
மரணத்தை
தழுவிய
நாள் முதல்...
என் கண்களுக்கு
முன்னே என் நட்புகள்
உயிரை
துறந்த
நாள் முதல்...
நான்
போராளியாக சென்றேன்
உன்னிடம்
விடைபெறாமல்
சென்றேன்...
இது
என்னுடைய
தவறில்லை எதுவும்
என் கைகளில்
இல்லை...
காலம்
என்னை சுமந்து
சென்றது
வாழ்க்கை
என்னை துரத்தி
வந்தது..
புதிய
விடியலை நாடி
புதிய சுகந்திரம்
தேடி
போராடும் எனக்கு
விடை தந்திடு...