உலகை வெல்லும் ஆயுதம்
உலகை வெல்லும் ஆயுதம்
உந்தன் கையிலே இருக்கு வாடா!
எவரஸ்ட் சிகரம் ஏறிபோக
ஊனம் தடையில்லை வாடா!
உள்ளத்திலே உள்ளத்திலே
உறுதியோடு வாடா!
புதைந்து கிடக்கும் விதையைப் போலே
மண்ணை ஜெய்க்கனும் வாடா!
ஆலமரத்தின் விதைகள்
அளவில் பெரியதில்லை வாடா!
ஆயிரம் முறை தோற்றுப்போன
எடிசன் சிந்திய வியர்வையினாலே
உலகத்துக்கே வெளிச்சம் வந்தது
உழைப்பின் பலனால் தானே !
உழைப்பிருந்தால் உறுதியிருந்தால்
வெற்றி நிச்சயம் வாடா!
கசக்கும் வேப்பங்காயும் கூட
நோயை போக்கும் வாடா!
அழுகி கிடக்கும் சேற்றிலேதான்
தாமரை பூக்கும் வாடா!
இடமும் பொருளும் வெற்றிக்கு
தடையில்லை வாடா !
ஒன்பது கோள்களில் ஒன்று
உனக்காய் சுற்றலாம் வாடா!