அழகே உனை ஆராதிக்கவில்லை-வித்யா

அழகே உனை ஆராதிக்கவில்லை........!
நீலத்தின் ஜாலம்
சில நேரம்.......
சிவப்பின் மோகம்
சில நேரம்......
கருமையின் காதல்
சில நேரம்........
காதல் கொண்டு
காமம் கடந்து
பன்னீர் தெளிக்கும்
புன்னகை சிலநேரம்........
கோபம் கொண்டு
மௌனம் சாதித்து
வெற்று பார்வையில்
சுட்டெரிப்பது
சிலநேரம்............
என
வானமே நீ......
நொடிக்கொரு அரிதாரம்
பூசிக்கொண்டு,
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
நிலையில்லாதவளாய்.......!
அவளின்
தாக்கங்கள்
உன் அழகை
ஆராதிக்க விடுவதில்லை........!
உன்னை பார்க்கும்
போதெல்லாம்
ரசனை மறந்து
வெறுமையே
மிஞ்சுகிறது............!
மாறாக
என்னோடு மதுக்கோப்பை
உரசிக்கொண்டு.....(cheers)
உதடிடுக்கில்
சிகரெட் வைத்து.......
என் போலவே
இரவெல்லாம்
உளறிக் கொண்டிருக்கும்
நட்சத்திர நண்பனுக்கு
நண்பர் விண்ணப்பம்
அனுப்புகிறேன்..........!