பரிகாரத்தில் துரோகிகள்
இனத்தின் அழிவு
சிலருக்கு
சூடுபிடிக்கும் வணிகம்.!
======================
நாற்காலிக் கவிஞன்
சிகரத்தில்
கைகொடுத்தது நடிப்பு..!
======================
அனாதை இல்லம்
திறப்புவிழா
பரிகாரத்தில் துரோகிகள்.!
=======================
பிணத்தில் நகை
சீருடையின்
குடிசை மாளிகையானது..!
=======================
நெஞ்சைத் தொடுவதில்லை
செய்திகள்
தன்வீட்டில் நடக்கும்வரை..!!
=========================
தோழி துர்க்கா