தூறத் தொடங்கியது மனம்
பெருமழைக்கான காத்திருப்பில் நான்.,
மழை எதிர்த்து மௌன வேண்டுதலில்
நடைபாதை கடை கிழவி.. !!
பொறுமையிழந்தது மேகம்.,
பொடுபொடுத்தது வானம்..
இறைவனின் நிராகரிப்பில் ஏனோ சில வேண்டுதல்கள்..அதிலின்று கிழவி..!
தூறத் தொடங்கியது என் மனம்..!!