சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்
குதிப்பதே எனக்குப் பறப்பது - குழந்தைபோல்
குதூகலிப்பதே எனக்குச் சிரிப்பது
கவலை மறப்பதே நானென்றும் படிப்பது
கஷ்டங்கள் என்பது நான் ஜெயித்தே முடிப்பது...!!
பென் குயின் என்னால் பறக்க முடியாது என
பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் - அவர்
பேச்சை ஒரு நொடி பொய் ஆக்கவே இங்கு
பெருமிதத்தோடு நான் குதித்தேன் - எனவே
குதிப்பதே எனக்குப் பறப்பது - குழந்தைபோல்
குதூகளிப்பதே எனக்குச் சிரிப்பது
கவலை மறப்பதே நானென்றும் படிப்பது
கஷ்டங்கள் என்பது நான் ஜெயித்தே முடிப்பது...!!
கடவுளுக்கும் தெரியாது என்றும் தொடரும்
கைவிடாத என் முயற்சியால் அதோ அந்த
கழுகுக்கும் மேலே ஒரு படி மேல் சென்று
கட்டாயம் ஒரு நாள் பறக்கத்தான் போகிறேன்
கண்டிப்பாக நடக்கும் - இது என் தன்னம்பிக்கை
ஆமாம்
கண்டிப்பாக நடக்கும் - இது என் தன்னம்பிக்கை
குதிப்பதே எனக்குப் பறப்பது - குழந்தைபோல்
குதூகளிப்பதே எனக்குச் சிரிப்பது
கவலை மறப்பதே நானென்றும் படிப்பது
கஷ்டங்கள் என்பது நான் ஜெயித்தே முடிப்பது...!!