கறைகள் அல்ல - அவை கவிதைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
அழகிய சுவற்றில் காப்பிக்கறை
அசிங்கமாய் காண்கையில் தெரிந்தது
அதையே கொஞ்சம் வித்தியாசமாய்
அன்று என் விழிகளும் கண்டது
வளர்ந்த மரத்தில் பறவைகளும்
வண்ணமாய் பறப்பதாய் தோன்றியது
பட்டென உடனே முடிவெடுத்தேன் என்
பார்வையில் இனிமை தத்தெடுக்க - இனி
கள்ளிச் செடியின் முட்கள் கண்டால் - நான்
கவிதை எழுத பென்சில் பறிப்பேன்........!!