பயணித்தால் தானே பாதைகள் புலப்படும்
![](https://eluthu.com/images/loading.gif)
பறந்தால் தானே தெரியும் உனக்கு
பாசமாய் புயலும் வழி விடுவதை.....!!
அடிக்குது புயலு அம்மம்மா முடியாது
அப்பாடி என்று அமைதியாய் இருந்தால்...
அச்சுறுத்தும் உன் சக்தியும் உன்
அடி மனதில் புரண்டு......
எனவே
மனத்தால் தெளிந்து மலை போல் எழுவோம்
மறப்போம் கவலை - மறுஜென்மம் இனிமை...!!
( கவலை நமை சாகடிப்பதால்
கடைசி வரியில் - மறுஜென்மம் பிறந்துள்ளது
என்பதை கவனிக்க )