இறை புலம்பல்
![](https://eluthu.com/images/loading.gif)
பொருளற்ற பொருள் தேடி
பொழுதும் போக்குகிறேன்
மனமும் நிகழ்வும் ஒத்திசையாத
வாழ்க்கை...
இதை வீணென்று வேரருப்பதா
இல்லை வாழ்வென்பதிதுதான்
என விளங்கிக்கொள்வதா?
இருப்புக்கும் விருப்புக்குமிடையில் அல்லாடுமெனை
ஆட்கொண்டருள்வாய் இறைவனே...