சிரித்தபடி எழுங்கள் - சிறகுப் பரிசு கொடுக்கப் போகிறது வானம்

முட்கள் விழிகளை குத்தாது - நீ
முளை விடும் தளிர்களை ரசித்து விடு...

தோல்விகள் நம்மை இறக்காது - நீ
துணிவுடன் வெற்றிக்கு செயல் படு......

வலிகளும் கனிகளும் கலந்ததே வாழ்க்கை
வசந்தமும் பாலையும் கலந்ததே வார்த்தை

சுடுகின்ற வார்த்தையை சுகமான வசந்தமாக்கு
வலி தரும் காயத்தை வரைபடமாய் நீயும் பாரு

புதுமை விடியல் தினமும் தெரியும்
பூக்கள் மனதில் பூப்பது புரியும்

புலம்பி அழவே அவசியம் இல்லை - இனி நீ
பூரித்து எழவே பிறக்குது விடியல்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Mar-14, 6:51 am)
பார்வை : 91

மேலே