தங்கை
நீ அறியா வயதில் உன் கரம் பிடித்து சுற்றி திரியாத
பேதை இந்த அண்ணன்.
தாலாட்டு பாட்டு ஒன்று பாடி உன் தலையை என் தோளில்
சுமக்காத பாவி இந்த அண்ணன்.
நீ கொஞ்சி பேசும் அழகை கண்டு மகிழா தேடல்
இந்த அண்ணன்.
நீ செய்யும் குறும்புகளை தட்டி தலையில் குட்ட குடுப்பினை
இல்லாதவன் இந்த அண்ணன்.
வானவில்லின் 7 வண்ணம் காட்டி உணவு அழியா தவன்
இந்த அண்ணன்.
இத்தனை பாச நிகழ்வுகள் பெறாதவன் உன் அண்ணன்
ஆகிரேன் என் வாழ் நாடகள் முடிந்து என் கல்லறையில்
உன் இருதுழி கண்ணிர் பெறுவதற்கு.