கருப்பு காந்தி

கருமைக்கு பெருமை
சேர்த்த
விருது நகரின் விருது.
படித்தவர் போற்றும்
படிக்காத மேதை.

அடுத்தவரை அரசனாக்கி
ஆளவைத்து
வரலாறு படைத்தும்
வாடகை வீட்டிலேயே
வாழ்ந்திட்ட ஏழை.

நாட்டு மக்களின்
நலம் ஒன்றே அவருக்கு
துணையானதால்
இல்லறத்தை மறந்து
வாழ்ந்த பிரம்மச்சாரி.

சத்தியமூர்த்தியின்
சீடரானார்
அவர் தம்
வாழ்க்கையில்
சத்தியசீலரானார்.

குலக்கல்வியை அகற்றி
.மதிய உணவு திட்டம்
கொண்டு வந்து
படிப்பவர் எண்ணிக்கை உயர்த்தி
அறிவுக் கண்ணைத் திறந்தார்

தமிழக வளர்ச்சிதனை
தனக்குள் வரித்தார்.
காமராசர் ஆட்சியில்
பொற்காலம் கண்ட
தமிழகமாய் மற்றினார்.

பொன்னு விளையும்
அரசியல் பூமியில்
இவர் தரிசானவர்.
செத்த பின்னும்
சொத்து ஏதும் இல்லாதவர்.

எழுதியவர் : கோ.கணபதி (11-Mar-14, 8:17 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : karuppu gandhi
பார்வை : 3897

மேலே