இன்சூரன்ஸ்

அவன் : மச்சான்... ஒரே ஆச்சரியமா இருக்குடா...!
இவன் : ஏண்டா?
அவன் : இல்லடா...நேத்து எங்க வீட்டுக்கு LIC ல இருந்து ஒரு பொம்பள வந்து இருந்துச்சு... அது ரொம்ப நேரமா என் பொண்டாட்டிகூட பேசிகிட்டு இருந்துச்சு....அது போனதுக்கு அப்புறம் பாத்தீன்னா வீட்ல என் பொண்டாட்டி என்னைய செமையா கவனிக்கிறதும்,மரியாதை குடுக்குறதுமா அப்படியே மாறிட்டாடா....அதை நினைச்சாத்தான் ஒரே ஆச்சரியமா இருக்குதுடா....நல்ல பொம்பளைடா அவ....
இவன் : அடப்பாவி மாப்ளே....அநியாயத்துக்கு அப்பிராணியா இருக்கியேடா...அடேய்...நீ எப்போ,எப்படி செத்தா..எவ்வளவு கிடைக்கும்னு வந்தவ உன் பொண்டாட்டிகிட்ட சொல்லி உனக்கு சாவு மணி அடிச்சிருப்பாடா...உஷாரா இருந்துக்கோ மாப்பிள..இப்போ உன் வாழ்கை உன் கையில....
அவன் : அது எப்பிடிடா உனக்கு தெரியும்?
இவன் : ஏண்டா...இன்சூரன்ஸ்ல இருந்து வந்து சம்பந்தம் பேசவா வருவாங்க....நான் சொல்றத சொல்லிபுட்டேன்...அதுக்கு மேல உன் இஷ்டம்...