என்னைவிட்டு செல்வாயா சொல்லடி கண்ணே 555

என் உயிரே...

நீ கேட்ட நந்தவனம்
அமைத்துவிட்டேன்...

நீ கேட்ட மணமாலை
என் கைகளில் கொண்டேன்...

மணமகளாக நீ வர
வேண்டுமென நினைதேனடி...

மணபெண்ணின் தோழியாக
வந்து நிற்கிறாயடி கண்ணே...

மழலை பாக்கியம்
உனக்கு இல்லையென...

சொன்னது யாரடி
உனக்கு...

நீ என் தாயாகவும்
நான் உன் சேயாகவும்
மாறினால் என்னடி...

என் வாழ்வை பார்த்து
ரசிக்க நினைக்கிறாயடி...

உன்னைவிட்டு என்னால்
எப்படி முடியுமடி...

இன்றுதான் நிகழ
வேண்டுமோ...

உன்
வாகன விபத்து...

உன்னிடத்தில்
நான் இருந்தால்...

அப்போதும் என்னை
விட்டு செல்வாயடி நீ...

நாம் மணமாலை சூடியபின்
விபத்து என்றால்...

என்னை விட்டு
விலகுவாயோ அன்றும்...

உன் எண்ணப்படி நான்
மணமேடை ஏறுகிறேனடி...

என் முதல் மழலையாக
நீ என்னுடன் வந்துவிடுவதென்றால்...

என் மழலையாக
வந்துவிடடி...

ஆயுள் காலம்
முழுவதும்...

வந்துவிடடி...

என் அன்பு மழலையாகவே
என்னுடன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Mar-14, 4:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 106

மேலே