வாக்கு விபச்சாரம்

ஜனநாயக பூங்காவிற்குள்
அரசியல் போர்த்திய பூனைகளாக
அட்டுழியத்தின் ராஜாக்களும்
ஆணவத்தின் ராணிகளும்

என் இரத்தத்தின் வெப்பத்தில்
ஆக்ரோஷ சிந்தனைகள்
பொறுமைகளை காவுகொடுத்து
காளி அவதாரமெடுத்து
எழுத்து சூலத்துடன்
திரிந்து கொண்டிருக்கிறது.

கயவர்களை
சுட்டி காட்டி
வெட்டி வீழ்த்தி
தோண்டி புதைத்திடவே
வெறிப்பிடித்து
வெஞ்சின மை’யில்
ஊறிக்கொண்டிருக்கிறது
என் எழுதுகோல்...!

வாக்காளர்களை
விபச்சாரிகளாக எண்ணி
கொழுத்துப்போன
ஏழ்மை சதையினை
கடித்து குதற
பணப்பையோடு
அலைகிறது சில
அரசியல் நாய்கள்...!

நாய்களை விட்டுவிடவா.. ?
நோய்களை வளரவிடவா... ?

ஏய் வாக்காளனே..!
விற்பனை பொருளா
உன் வாக்குரிமை...?
பணத்தினை வீசினால்
உங்கப்பனை மாற்றி விடுவாயோ?

அடச்சீ ....!
கூறுக்கெட்ட
அற்ப மானிடனே...!
பணம் சுமந்த
அரசியல் நாய்கள்
வந்துக்கொண்டிருக்கிறது..!

என்ன செய்ய போகிறாய்..?
விலையில்லா மானத்தை
விலைக்கொடுக்க போகிறாயா? -உனை
விலைக்கு கேட்ட நாய்களை
எட்டி உதைக்க போகிறாயா ?

----------------------------------------------------------------------------

(தொடரும்... ஏப்ரல் 24 வரை... )


------------------------------இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (11-Mar-14, 11:35 pm)
பார்வை : 275

மேலே