விட்டுவிடு மானிடா விட்டுவிடு

சகுனம் சரி இல்லையாம் !
பூனையை கண்டு மனிதன் திரும்பினான்
மனிதனை கண்டு பூனை திரும்பியது
சகுனம் சரியில்லையாம் !...

கெட்டகாலமாம் !
ஊளையிட்ட நாயை பார்த்து மனிதன் கத்தினான்
மனிதனை பார்த்து நாய் ஊளையிட்டது
கெட்டகாலமாம் !...

நல்லகாலமாம் !
நரி முகத்தை பார்த்து விழித்தான் மனிதன்
மனிதன் முகத்தை பார்த்து விழித்தது நரி
நல்ல காலமாம் !...

புண்ணியம் செய்யணுமாம் !
பசுவிற்கு உணவு கொடுத்தான் மனிதன்
மனிதனுக்கு பால் கொடுக்கிறது பசு
புண்ணியம் செய்யணுமாம் !...

மானிடா நீ !!!
மிருகங்களை மனிதராக்காதே
அவையாவது ஒற்றுமையாய் இருக்கட்டும்
விட்டுவிடு!...மானிடா!!! விட்டுவிடு!...
உன் மூடப்பழக்கங்களை விட்டுவிடு!...

எழுதியவர் : TP Thanesh (12-Mar-14, 1:10 am)
பார்வை : 120

மேலே