மேகங்கள் பறிக்கலாம் வாருங்கள்

பட்டாம் பூச்சி மேகம்
பார்க்கும் விழிகள் விரல்கள்
பக்கம் சென்றே பிடிக்க
பரந்த வானம் தோட்டம்...!!
பிடித்து வருகிறேன்
கொஞ்சம்
ரசித்து விடுங்கள்
நீங்கள்.....
பூமியில் புன்னகை
பூக்கள்
புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள்......!!
சிரித்தால் வண்ணம்
பிறக்கும் - மனதில்
சிந்தனை வானம்
திறக்கும்....!!
மேலே வானம் கூட
மெல்ல நம்முள் இறங்கும்...!
மகிழ்வோம் மகிழ்வோம் - நாமே
மகிழவே பிறந்தது இந் - நாளே....!!