பாசக்கூடு -சே பா
(அல்லி மல்லி)
கதிரவன் உதித்துவிட
காக்காவும் கரைந்திட
காலையில மாட்டுக்காரன்
கலப்பையதான் துக்கிட்டண்டி!
செங்காளை ரெண்டும் பூட்டி
செவத்த துண்டு தலையில் கட்டி
மத்தாப்பு சிரிப்போட
மாமந்தான் கிளம்பிட்டாண்டி,
(உழவன்)
வாக்கால் வரப்போரம்
வண்டுதான் சத்தம் இடும்
சக்காளத்தி ரெண்டு பேறும்
சண்ணடையிடம வந்துருங்க,
(அல்லி)
கூரப்பொடவக்காரி
கொசுவத்த முடுஞ்சு வச்சு
முறுக்கு மீசைக்காரன்
முன்னாடிதான் நிக்கிறாலே,
(உழவன்)
பருவம் பார்த்து
பச்ச நெல்லு நீ விதைக்க
பங்காளி வயலுக்காரன்
பசபசன்னு பாக்குரானே!
(அல்லி மல்லி)
பாத்தி ரெண்டுங்கெட்டி
பச்சைக்கிளி ரெண்டுபேரும்
பயறு பச்சைகளை
பதுச்சு வச்சுடுங்க,
(அல்லி)
ஏத்தம் ஏறக்கிரதுக்கு
எங்கயுமே கிணறில்ல
என்னவளே நீ போயி (அழ்கிணறு)
மோட்டாரதான் போட்டுவிடே,
(அல்லி மல்லி)
மாடுகட்டி உழுகையில
மாமன் கோவணம் அவுறுதுன்னு
குமரி பொண்ணு சிரிக்கையில ,
ஏ பொண்டாட்டி ரெண்டுபேரும்
போசுக்குனுதன் கோவப்பட்டு
கும்மி அடிச்சேங்களே
குமரிப்பொண்ணு முதுகுலதான்,
(அல்லி)
எங்கோ மழை பெய்ய
மண் வாசனை நீ நுகர
மாமா! மழை பேய்யுதேனு
மார்போடு அனச்சஅவளே!
(மல்லி)
தூரத்து வெண்ணிலவ
சேலைகட்டி இரசித்தவளே
நட்சத்திர கூட்டங்கள
தன் தலை மயிரில முடுஞ்சவளே!
உழவனுடன் அல்லி மல்லி வாழ்க்கை...
ரசனையான வாழ்க்கையுடன்
என்றும் அன்புடன்
சே.பா