மனைவியின் பாட்டு

மனைவியின் பாட்டு!

கணவன் - "மைதிலி, இன்று உன்னுடைய பிறந்த
நாள்! என்ன பரிசு வேண்டும்?"
மைதிலி - "எனக்கு ஒரு வயலின் வேண்டும்;
வாங்கித் தாருங்கள்"

கணவன் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு நல்ல வயலின் வாங்கித்தந்து விடுகிறான்.

அடுத்த வாரம் அவன் அதை எடுத்து வந்து அதே கடையில் திருப்பித் தந்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு பெரிய ட்ரம்பெட்டை வாங்கிக் கொள்கிறான்.

கடைக்காரர் - "ஏன் வயலினை ட்ரம்பெட்டிற்கு
மாற்றிக் கொள்கிறீர்கள்? உங்கள்
மனைவிக்குப் பிடிக்கவில்லையா?"
கணவன் - "அவளுக்கு அது மிகவும்
பிடித்திருக்கிறது! ஆனால்---
நான் தான் இதற்கு மாறச் சொன்னேன்""
கடைக்காரர் - "ஏன்? உங்களுக்கு ட்ரம்பெட் மிகவும்
பிடித்தமானதா?"
கணவன் - "ட்ரம்பெட்டை வாசிக்கும் போது கூடவே
பாடவும் முடியாதல்லவா?"

--------------------சித்திரைச் சந்திரன்.

எழுதியவர் : செல்வப் ப்ரியா (சித்திரைச (12-Mar-14, 3:37 pm)
Tanglish : manaiviyin paattu
பார்வை : 223

சிறந்த நகைச்சுவைகள்

மேலே