நன்றி நன்றி நன்றி

வண்ணத்து பூச்சியின் வண்ணம் போல
அதிகாலை பனித்துளி போல
அந்தி நேர வெளிச்சம் போல
அருவி சாரல் துளி போல

இரவு வானில் விண்மீன் போல
இனிய யாழின் இசை போல
இன்பதமிழின் சுவை போல

இன்னும் சொல்ல மொழி தேடி
இன்பம் சொல்ல வழி தேடி
எங்கோ கிடைத்த மொழி கூறி
என்னால் முடிந்த கவி "நன்றி"!!!!!!

*************************************************************************

{என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நண்பர்களுக்கும் அம்மாவிற்கும் அண்ணனுக்கும் இந்த நிலவின் சிறிய "நன்றி "}}}}}

எழுதியவர் : நிலா மகள் (13-Mar-14, 11:55 am)
பார்வை : 412

மேலே