காதல்
கட்டுண்டு கிடக்கிறேன்
உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை நீ!!
சலிக்காமல் தொடர்கிறேன்
உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை நீ!!
வரண்டு விட்டது
என் நா
இன்னமும் கூட பேசவில்லை நீ!!
துவண்டு விட்டது
என் ஜீவன்
நீர்வார்க்க கூட தயாராயில்லை நீ!!
இருந்தால் என்ன?
நடுங்கி வீழ்ந்தாலும்
நெருங்குவேன் உன்னை
மரணம் கொண்டாலும் மறித்து எழுவேன் நான்
உனக்காக
உன் பால் கொண்ட காதலுக்காக!!!!!