பெண்
ஒரு பெண் பிறந்து பருவமடைந்து
பத்தினியாகி மக்களை பெற்று -
மருமக்களை பார்த்து
அவர் மக்களை அணைத்து
மறைபவள் மட்டுமல்ல
இசைவுகளுக்கும் இனப்பெருகங்களுக்கும்
இன்னல்களுக்கும் மட்டுமல்ல
இந்த நாடு என்னுடையது
இன்னவர் எனுடயவர் - என்று
நீ கூர இந்த மண்ணில் பிறக்கவைத்த
இறைவன்
இவ்வுலகை அறிமுகபடுத்தி - உனக்கு
பாலுட்டும் பொழுதே - அறிவூட்டும் குரு
உன் இன்னல்களுகளுக்கு செவி
கொடுக்கும்போது - உன் தோழி
ஓர் ஆண்மகனால் ஒருவருக்கு
உடலை மட்டுமே தரமுடியும்
அவைகளுக்கு உயிர்ரையும் உணர்வுகளும்
தருபவள் பெண் தான்
பிள்ளையை வளர்க்கும்போது - போற்றலையும்
தூற்றலையும் ஏற்பவள் பெண் தான்
அவளை மதிக்கபார் - மிதிக்கபார்கதே
அவளை சிந்தித்துப்பார் - சிதைகப்பார்கதே
அவளை ஆராதிக்கபார் - அழிக்கபார்கதே