அவளின் நிழலாக நிற்கையில்

நிலவை ரசிக்க நிலவிடமே
விழிகளை கேட்டு நிற்கிறேன்
மாலை ரசிக்க மாலையிடமே
மனதை கேட்டு நிற்கிறேன் !

கவிதை எழுத கவிதையிடமே
விழி மொழியை கேட்டு நிற்கிறேன்
கனவை செதுக்க காதலிடம்
கற்பனையை கேட்டு நிற்கிறேன் !

காதலை அழகாக்க காதலியிடமே
நான் காணும் கண்களை கேட்டு நிற்கிறேன்
என்னுயிரை காண்பதற்கு அவளிடமே
காதல் இதயம் கேட்டு நிற்கிறேன் !

பட உதவி : நன்றி : புகைப்பட நிபுணர் , திரைப்பட நடிகர் வசந்த குமார்

எழுதியவர் : கவி கண்மணி , கட்டுமாவடி (14-Mar-14, 8:53 pm)
பார்வை : 111

மேலே