யாழ் யாழ்ப்பாணம்

மஞ்சள் வெயில் பூத்த வானம்
பனை மரங்களின் தாலாட்டு
பச்சை கிளிகளின் சங்கீதம்

யாழ் தொட்டால் எம்
காதுகளுக்கு எட்டிவிடும்
மனதோடும் ஒட்டிக்கொள்ளும்

நற்பண்பும் அனைவரையும்
அரவணைக்கும் நல்லுணர்வும்
யாழ் மக்களின் உடைமைகள்

சோலைக் குயில்களின் சங்கீதமும்
காலை எழுந்ததும் மனதுக்கு
சுகம் சேர்க்கும்...

வீட்டை விட்டு எட்டி நடந்தால்
வானம் பாடிகளின் ஆட்டமும்
வீதியோர பசுக்களின் கூட்டமும்

நெஞ்சோடு ஒட்டிய கவிதைகள்

காதுகளில் இனிமையாய்
ஒலிக்கும் செந்தமிழும்...

வானுயர எட்டி தலை நிமிர்ந்து
நிற்கும் பனைமரங்களும்
மனதுக்குள் மலர்வனங்கள்...

என்றுமே இயற்க்கை நிறைந்த
"யாழ்"

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 6:27 pm)
பார்வை : 791

மேலே