வந்து சேர்

நீ எப்படி
இத்தனை அழகென்று
எனக்கு தெரியவில்லை..

உன்னை கையில் ஏந்தி,
உன் கூர்உதடு தொட்டு,
உன் விழுங்கும் விழிகளைக்
கண்ணாடியாக்கி,
அதில் என்னையே பார்த்து,
பஞ்சாய் இருக்கும்
பாதம் பிடித்து,
பக்கம் அமர்ந்து பேச
ஆசைதான்...

எழுத்து மட்டும்
உனக்கு அறிமுகமென்றால்,
இந்த வாசிப்பின் முடிவில்
என்னருகில் இருந்திருப்பாய்...

நாளை முதல்
தமிழ் வகுப்பு உனக்கு...

வந்து சேர்...

எழுதியவர் : அகிலா (15-Mar-14, 6:55 pm)
சேர்த்தது : Ahila
Tanglish : vanthu ser
பார்வை : 375

மேலே