நம்பிக்கை

நம்பிக்கை

கனவாகவே இருக்கட்டும் -ஆனால்
அடையும்வரை அது களயாதிருக்கட்டும்!

காற்றாகவே வீசட்டும் - ஆனால்
மூசுக் காற்றாக அது இருக்கட்டும் !

நிலவாக ஒளிரட்டும் - ஆனால்
பிறையின்றி முழுதாக ஒளிக்கட்டும்!

மண் நீராய் இருக்கட்டும் - ஆனால்
தாகம் தணிக்கும் தண்ணீராய் உதவட்டும் !

தீயாக எரியட்டும் -ஆனால்
தீயவை எரித்து , நல்லவை சமைக்கட்டும் !

ஆகாச மாகவே இருக்கட்டும் -ஆனால்
அது மனுச மனசுக்குள் விரிந்திருக்கட்டும் !

நம்பிக்கை இருக்கட்டும் -ஆனால்
தன்னம்பிக்கையாய் அது தளையட்டும் !

எழுதியவர் : படைக்கவி பாகருதன் (16-Mar-14, 11:06 am)
பார்வை : 65

மேலே