தமிழ்
என்ன தான் தருவேன்
என்ன தான் தருவேன்
தமிழே உனக்கு என்னையே தருவேன் !!
ஒளவை , கம்பன் காலம் தொட்டு
வைரன் , வாலி எழுதிய தமிழே !
இத்துனை காலம் வாழ்ந்த போதும்
எனக்கென புதிதாய் பிறந்த தமிழே !!
ஒளவையின் சுவடியோ உந்தன் காலில்
பாரதி கவியோ உந்தன் நாவில் ,
கூந்தல் முழுதும் புறநானூறு ,
என் பாடல் வைக்க இடம் ஏது கூறு ??
பெருங்கடல் ஆழம் உன் அங்குட்டம்(பெருவிரல்) நீளம் ,
இமயமே விழுந்தாலும் உன் சிறுவிரல் தாங்கும்
உன்னை பிற மொழியுடன் ஒப்பிடும் நேரம்
ஏழ் கடல் நீரும் சினமுடன் பொங்கும் !
அறிவின் நெறியே !
மதியின் ஒளியே !!
உலகின் மொழியே !!
ஊனின் உயிரே !!
செந்தமிழ் மொழியே !!
என் பேச்சில் கலந்த மூச்சித் தமிழே !
உன் திருவடி தொட்டு வணங்கிடுவேனே !!
உனக்காக என்றும் மாய்த்திடுவேனே !!