குறும்புப் பா - 2
பதவி சுகம் கண்டவரிடம்
பாதி சுகத்தில் பரித்துவிட்டால்
பரிதவிக்கும் அவர் உள்ளம்
***************
எல்லாம் தெரியும் என்று
இருமாந்திருப்பவரும்
எழுதி கூட்டி பார்த்துப்
படிப்பதிலும் தப்பும்
தவறுமாய் படிக்கிறார்
****************
பிள்ளையார் கோவிலில்
உக்கி போட்டு
நெடுஞ்சாண் கிடையாய்
விழுந்து கும்பிட்டு
பழகியதன் பலன்
தேர்தலில் தாய்
கட்சியில் சீட்டு.
*****************
போலீஸ் DGP வீட்டிலும்
செக்குயுரிட்டி அலாரம் ,
இன்டெர்னல் செக்குயுரிட்டி
காமிரா
பாதுகாப்புக்காக
*****************