குழந்தையின் கவிதை
எழுதாமல்
ஒரு கவிதை
குழந்தையின் சிரித்த முகம்
****************
உறக்கத்தையும்
ரசிக்க வைத்துவிடும்
தூங்கும் குழந்தை
***************
பொன்னைக் காட்டிலும்
மண்ணே மதிப்பு மிக்கது
குழந்தைகளுக்கு
***************
பொம்மைக்கும்
உயிருண்டு
குழந்தைகளின் கையில் .
****************
குழந்தைகளையும்
தூங்க வைத்துவிடும்
பொம்மைகள்
*****************
அழும்போதும்
முகம் அழகாக இருக்கும்
குழந்தைகளுக்கு
*******************