மௌனத்தை கைவிடு

நம் பிரிவுக்கு நீ வகுத்த கோடு -நித்தமது
தொடர் வருத்ததோடு எனை படுத்தும்பாடு
உயர் துயரத்தால் நான் கடக்கும் சங்கடமேடு
இன்னும் சந்திக்க வேண்டுமா அந்த சந்தோசக்கேடு
எனக்கேட்கும் எனதுள்ளம் சந்தேகத்தோடு
நீ - சம்மதித்து எனக்கருள்வாய் சந்தோச வெள்ளம்
அதை சந்திக்க காத்திருக்கும் எந்தன் உள்ளம்....!!!!!

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (16-Mar-14, 8:34 pm)
பார்வை : 219

மேலே