குழந்தை

தட்டிக்கொடுத்து
தைரியம் சொல்கிறான்
கருவறையுள் இருந்து

மகிழ்ச்சியுடன்
இருக்கின்றன குழந்தைகள்
மறந்துவிடுவதால்!

பிறந்தவுடன் அழுதது குழந்தை!!
...
...
முகம் மூடி
மருத்குவத் திருடர்கள்!

புதிதாய்
ஒரு பெயர்வைக்கும்
குழந்தை

தூக்கத்தில்
சிரிக்கும் வியாதி
குழந்தைகளுக்கு

அடிக்கடி
எழுப்பும்
அலாரம்

சர்க்கரை
சேராத
இனிப்பு

தொட்டில்
இல்லாத வீட்டில்
புடவைக்கு பங்காளி

பேரனின் சிறுநீர் பட்டவுடன்
குறைந்தது
தாத்தாவுக்கு உப்பு

எழுதியவர் : (16-Mar-14, 10:37 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 172

மேலே