கவர்ச்சி முதலீடு ஏமாறாதே

உண்மை என்றிடுவார் உணர்வினை தூண்டிடுவார்
கவர்ச்சிகரமான பரிசினை உடனடியாக வழங்கிடுவார்
முதலீட்டை கேட்டிடுவார் முன்னுரிமை தந்திடுவார்
கவர்ந்திழுக்கும் வட்டியினை வாரியே வழங்கிடுவார்

காலங்கள் சிலசெல்ல சொன்னபடி செய்திடுவார்
நாமும் மற்றவருக்கு பரிந்துரை செய்திடுவோம்
முதலீடுகள் குவிந்துவிடும் முதலாளியும் ஆகிடுவார்
தன்வாழ்க்கையை பெருக்கிகொள்வார் சமுகத்தில்
பெரியவனாக

சிற்றுந்து எனவும் சீரியவாசல் எனவும்
முதலீட்டை முதலீடுசெய்து தான்வளமை
கொண்டிடுவார்
இயன்றவரை சுருட்டியபின் முதலாளிகள்
தலைமறைந்து
இருந்தஇடம் தெரியாமல் எங்கேயோ
மறைந்திடுவார்

நாட்கள் செல்லசெல்ல முதலீடு செய்தவர்கள்
சொன்னபடி வட்டியினை பெற்றுக்கொள்ள
முடியாமல்
முகத்தினை சுளித்திடுவார் பரிந்துரைத்தவரை
அணுகிடுவார்
ஏமாந்தது தெரியாமல் இங்குமங்கும்
அலைந்திடுவார்

யோசிக்காமல் முதலீடுசெய்து
இருந்தப்பணத்தை இழந்தவர்கள்
பட்டியல்கள் இங்கே
நீண்டுக்கொண்டே தான்செல்லும் ...

சிறிதுசிறிதாக சேர்த்தப்பணம்
வங்கியில் போட்டப்பணம்
கல்யாணதிற்காக சேர்த்தப்பணம்
பெண்ணிற்க்காக போட்டப்பணம்

ஒய்வுபெற்று கிடைத்தப்பணம்
பணிக்கொடை யாவையும்
வட்டியினால் கவரப்பட்டு
முதலீடுசெய்தவர்கள் பட்டியல்...

கண்கள் கெட்டப்பின்னால் சூரிய வணக்கங்கள்
பற்கள் கொட்டியப்பின்னால் கரும்புதின்ன ஆசை
நம்ஆசையினை பெரிதாக்கி குளிர்காயும் எத்தர்கள்
புற்றீசல் போல ஆங்காங்கே தோன்றிடுவார்..

ஏமாந்தவர்கள் மறுபடியும் ஏமாந்துக்கொண்டு
இருக்கலாமா
ஏமாந்தது போதுமென்று இயல்புநிலையை
உணருங்கள்
உங்கள் பணத்தினை இயல்பாக இருந்திடவே
வட்டிகள் குறைவென்றாலும் வங்கியில்முதலீது
செய்திடுவீர்..

வங்கியில் போட்டப்பணம் வளர்ச்சிக்கு உதவிடுமே
நன்மைகள் செய்திடுமே நம்மையெல்லாம்
உயர்த்திடுமே
உண்மையினை உணர்ந்திடுங்கள் உண்மைகள்
சிலநேரம்
கசக்கத்தான் செய்திடுமே முதலீட்டாரே
சிந்தியுங்கள்...

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (17-Mar-14, 12:27 am)
பார்வை : 192

மேலே