மரம் வாழ மனிதம் வீழ்த்துமோ

மரம்தான் வாழ மனிதம் வீழ்த்திடும்
மர்ம உலகாய் இந்நாடு மாறுமோ..

நீர்மறந்த வேர்மரத்தின்
கண்ணீராய் அமிலமழை

காலம் பாராமல்-முகிலுடன்
கலவி இன்பம்-உணவு
பயிர் அழிக்கும்
பருவம் தவறிய மழை...

கலவியில் தோற்றவனின்-மூச்சு
காற்றில் அதீத வெப்பம்

துணையிழந்த தோப்புமரம்
துறந்திவிட்ட சுவாசத்தால்
துளையுண்ட ஒசோனோ
துடிக்கிறான் விரிவால்....

எழுதியவர் : காசி. தங்கராசு (17-Mar-14, 1:04 am)
பார்வை : 97

மேலே