எனை மறந்தேன்

குத்தூசி கொண்ட போட்டு
குறுக்க ஒரு குடம் வச்சு
குளம் வரைக்கும் போறவளே

குறுக்கே நடந்து வர்ரேன்
கொஞ்சம்
முகங்காட்டி போடி புள்ள

கிழக்க வேல வச்சு
வண்டிகட்டி
வடக்க போறே புள்ள

உன்னால

அறுத்த கதுரெடுத்து - வயல
தொழிப்பெரட்டி நட்டேன் புள்ள

அடஞ்ச கோழி கூட
அப்ப அப்ப
அலகெடுத்து சொரியும் புள்ள

அட முழுச்சு கெடந்துங்கூட
முகஞ்சுழிக்க மறந்ததென்ன

ஓ முத்தான முகம் பாத்து
பித்தான மாத்திப் போட்டேன்

முந்தான நிறம் பாத்து
ஏ வீடே மறந்து போனேன்

அந்த மல்லிகப் பூ வாசத்துல
அடிக்கெணறா வத்திப் போனேன்

அந்த ஆட்காட்டி விரத்தீண்ட
அங்கேயே உறஞ்சு போனேன்

அந்த பச்சமல உச்சில தா
தேன கட்டி காத்திருக்கேன்

ஆன மேல சீரு கட்டி
ஏ ராசாத்தி நீ போனதெங்கே

வத்திப்பொட்டி குச்சி போல
ஓ நினைவால நெறஞ்சிருக்கேன்

சுத்தி அடுச்ச காத்த போல
நீ போன திசை தெரியலயே..

எழுதியவர் : sridharan (17-Mar-14, 12:44 pm)
Tanglish : yenai maranthen
பார்வை : 145

மேலே